You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: யுக்ரேனுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாரான ரஷ்ய அதிபர்
காணொளி: யுக்ரேனுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாரான ரஷ்ய அதிபர்
பிரசுரிக்கப்பட்டது
பலமுறை கூறப்பட்டது போல, யுக்ரேனுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக உள்ளது என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
"முன்பு இஸ்தான்புல்லில் எட்டப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் முன்னேற ரஷ்யா தயாராக இருக்கிறது. அந்த ஒப்பந்தங்களில், யுக்ரேன் பிரதிநிதிகள் குழுவும் அப்போது ஒப்புதல் அளித்திருந்தது என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.
அதாவது அவர்கள் அந்த ஒப்பந்தங்களில் திருப்தியாக இருந்தார்கள் என்று அர்த்தம். எனவே, அந்த ஒப்பந்தங்களை விட்டு நாம் விலகுவதற்கு எந்தக் காரணமும் எனக்குத் தெரியவில்லை" என விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு