You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: 220 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை
ஹரியானா மாநிலத்தின் அம்பாலா மாவட்டத்தில் உள்ள தனூரா கிராமத்தில், திறந்த நிலையில் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் நான்கு வயது குழந்தை ஒன்று ஜுன் 30-ம் தேதி விழுந்தது.
அந்தக் குழந்தை தனது தந்தையுடன் வயலுக்குச் சென்றிருந்ததாகவும் அப்போது அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது, சுமார் 220 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
குழந்தையை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, இந்திய ராணுவம் மற்றும் உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் இணைந்து தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குழந்தையை பாதுகாப்பாக மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மீட்புப் பணி அவசரகால அடிப்படையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தற்போதைய மீட்பு முயற்சிகள் வெற்றியளிக்காவிட்டால், மாற்றுத் திட்டமாக அருகில் மற்றொரு ஆழ்துளைக் கிணறு தோண்டுவதற்கும் அதிகாரிகள் தயாராக உள்ளனர் என்று அவர் கூறினார்.
அந்த ஆழ்துளைக் கிணறு அண்டை நில உரிமையாளருக்குச் சொந்தமானது என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
ஆழ்துளைக் கிணற்றை மூடாமல் விட்டதில் அலட்சியம் நடந்திருக்கலாம் என்பதால், சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளருக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு