காணொளி: கடலில் 16 மணி நேரம் தத்தளித்த குடும்பம்
காணொளி: கடலில் 16 மணி நேரம் தத்தளித்த குடும்பம்
பிரசுரிக்கப்பட்டது
தாய்லாந்தில் வாடகைக்கு எடுத்த ஜெட் ஸ்கீ கவிழ்ந்ததில் கடலில் சிக்கிய பிரெஞ்சு குடும்பத்தினரை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர்.
50 வயதான தந்தையும், அவரது 5 மற்றும் 7 வயது மகன்களும் அதிகளவு கடல் நீரை விழுங்கியதால், "வெளிறிப்போய், மிகவும் சோர்வடைந்த நிலையில்" இருந்ததாக அரசு அதிகாரி ஒருவர் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
மூவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சிறிது நேரத்திலேயே சிகிச்சை முடிந்து அவர்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



