காணொளி: ஐரோப்பாவில் வெப்ப அலையால் 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
காணொளி: ஐரோப்பாவில் வெப்ப அலையால் 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
பிரசுரிக்கப்பட்டது
ஐரோப்பாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கோடை வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக உள்ளது.
ஐரோப்பிய கண்டம் முழுவதுமே அதிகபட்ச வெப்பநிலை பதிவாகிவருகிறது. குறிப்பாக ஜெர்மனி, போலந்து, செக் குடியரசு போன்ற நாடுகளில் அதிக வெப்பம் பதிவாகிறது. இந்த கடுமையான வெப்ப அலை தொடர்ந்து கிழக்கு நோக்கி நகர்கிறது.
பிரான்ஸின் சார்தே பகுதியில் 48 டிகிரி செல்ஸியஸ் வெப்பத்தில் தார் சாலை சற்று உருகிய காட்சிகளையும் காண முடிந்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



