காணொளி: அமெரிக்காவில் அலையில் சிக்கிய சிறுவனை போராடி மீட்ட மெய்க்காப்பாளர்

காணொளிக் குறிப்பு, அலையில் சிக்கிய சிறுவனை போராடி மீட்ட மெய்க்காப்பாளர்
காணொளி: அமெரிக்காவில் அலையில் சிக்கிய சிறுவனை போராடி மீட்ட மெய்க்காப்பாளர்
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டா குரூஸில் உள்ள சீபிரைட் கடற்கரையில், 10 வயது சிறுவன் ஒருவர் அலையால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். அப்போது, 16 வயதான உயிர்காப்பாளரான ரைடர் வில்லியம்ஸ், கடலில் இருந்து சிறுவனை மீட்டார். இத்தருணத்தை, அருகில் இருந்த ஒருவர் எடுத்த காணொளி காட்டுகிறது.

வில்லியம்ஸ் சிறுவனை அடைந்தபோது, ​​அந்தச் சிறுவன் கரையிலிருந்து சுமார் 13.7 மீட்டர் தூரம் அடித்துச் செல்லப்பட்டிருந்தார். கடற்கரைக்கு வந்திருந்த பலரும் இந்த மீட்புப் பணியில் இணைந்தனர். இந்த மீட்பு நடவடிக்கை இரண்டு நிமிடங்களுக்கும் சற்று அதிகமாக நீடித்தது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரைடர் வில்லியம்ஸை வெள்ளை மாளிகைக்கு அழைத்து, உயரிய குடிமை விருது ஒன்றை வழங்க அழைப்பு விடுத்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு