காணொளி: மீட்க வந்த நபரை தாக்கிய காயமடைந்த சிறுத்தை

காணொளிக் குறிப்பு,
காணொளி: மீட்க வந்த நபரை தாக்கிய காயமடைந்த சிறுத்தை
பிரசுரிக்கப்பட்டது

கர்நாடகாவில், காயமடைந்த சிறுத்தையை மீட்கும் பணி நடைபெற்ற போது அந்த சிறுத்தை மீட்புக் குழுவில் ஒருவரைத் தாக்கியது.

வாகனம் மோதியதில் சிறுத்தை ஒன்று காயமடைந்ததாக தகவல் கிடைத்ததும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

இதனைத் தொடர்ந்து, மயக்க மருந்து செலுத்தும் துப்பாக்கியுடன் நிபுணர் வரவழைக்கப்பட்டு, சிறுத்தையை மயக்கமடையச் செய்ய மருந்து செலுத்தப்பட்டது.

பின்னர், சிறுத்தையை வாகனத்தில் ஏற்ற அதிகாரிகள் முயன்றபோது, ​​அது ஒருவரைத் தாக்கியது.

சிறுத்தையும் காயமடைந்த அதிகாரியும் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை எனவும் வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு