காணொளி: ஒரு பாலியல் தொழிலாளியின் வாழ்வும் மரணமும்
காணொளி: ஒரு பாலியல் தொழிலாளியின் வாழ்வும் மரணமும்
பிரசுரிக்கப்பட்டது
ஆறு ஆண்டுகளாக, இசாட்டா கமாரா உயிர்வாழ்வதற்கான போராட்டத்தை 'ஆப்பிரிக்கா ஐ' தொடர்ந்து கவனித்து வந்துள்ளது.
16 வயதில் தாயான இசாட்டா, தனது மகளை வளர்ப்பதற்காகப் பாலியல் தொழிலில் ஈடுபட்டார்.
ஒரு கும்பலால் கடத்தப்பட்ட அவர், செனகலில் பாலியல் அடிமைத்தனத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்து கண்டறியப்பட்டது.
அந்தக் கும்பலின் பிடியிலிருந்து விடுபட்ட அவருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் சொந்த ஊர் திரும்பினார். மன அமைதிக்காக இஸ்லாம் மதத்தைத் தழுவினார். அவரது வாழ்க்கையில் என்ன நடந்தது? இந்தக் காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



