பசுமைப் பட்டாசு என்பது என்ன? அதை கண்டறிவது எப்படி?

காணொளிக் குறிப்பு, பசுமைப் பட்டாசு என்றால் என்ன? இதனை கண்டறிவது எப்படி?
பசுமைப் பட்டாசு என்பது என்ன? அதை கண்டறிவது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியின்போது இந்த பசுமை பட்டாசு பற்றியும் நாம் கேள்விப்படுவதுண்டு.

பசுமை பட்டாசு என்றால் என்ன?

'பசுமை பட்டாசு' என்பது தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் 'நீரி'யின் (NEERI) கண்டுபிடிப்பு. இது, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) கீழ் வரும் அரசு நிறுவனம். பாக்குறதுக்கு வழக்கமான பட்டாசு மாதிரிதான் இருக்கும், வெடிக்கும்போது சத்தமும் அதே மாதிரி தான் இருக்கும். ஆனா வெடிக்கும்போது மாசுபாடு குறைவாக இருக்கும்.

பசுமை பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருட்கள் வழக்கமான பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களில் இருந்து மாறுபட்டவை.

இதுபற்றி பேசிய'நீரி'யின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சாதனா, "பசுமை பட்டாசுகள், சாதாரண பட்டாசுகள் வெளியிடுவதை விட சுமார் 40-50% வரை குறைவாகவே மாசை வெளியிடும். ஆனால், முற்றிலும் பாதுகாப்பானது என்றோ, பாதிப்பே ஏற்படுத்தாதவை என்றோ கூறிவிடமுடியாது" என்றார்.

இதில் பேரியம் நைட்ரேட் போன்ற நச்சு உலோகங்கள் தவிர்க்கப்பட்டு, நீராவியை வெளியிடும் அல்லது தூசியைக் கட்டுப்படுத்தும் வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.

நீரி, 4 வகைகளில் இந்த பசுமை பட்டாசை தயாரித்திருக்கிறார்கள்.

1. தண்ணீரை உருவாக்கும் பட்டாசுகள்

2. கந்தக மற்றும் நைட்ரஜன் வாயுக்களை குறைவாக

வெளியிடும் பட்டாசுகள்

3. அலுமினியம் குறைவாக பயன்படுத்தப்படும் பட்டாசுகள்

4. அரோமா பட்டாசு

சரி நீங்கள் வாங்குவது பசுமை பட்டாசுதான்னு எப்படி கண்டுபிடிப்பீர்கள்?

பட்டாசுப் பெட்டியின் டப்பாக்களில் மீது "பசுமை பட்டாசு" என CSIR-NEERI-ன் லோகோ இருக்கும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு