காணொளி: மெக்சிகோவின் தேசிய காவல் படையில் குட்டி நாய்

காணொளிக் குறிப்பு, மெக்சிகோ: தேசிய காவல் படையில் குட்டி நாய்
காணொளி: மெக்சிகோவின் தேசிய காவல் படையில் குட்டி நாய்
பிரசுரிக்கப்பட்டது

தேசிய காவல் படையின் லெப்டினன்ட் டெபோரா ஹெர்னான்டெஸ் கூறுகையில், "கொமாண்டோ ஒரு தத்தெடுக்கப்பட்ட நாய்.

தேசிய காவல்படையில் பெரிய ரக நாய்கள் மட்டுமே இடம்பெற முடியுமென்ற கருத்தை மாற்றுவதற்காகவே கொமாண்டோ வந்துள்ளது. இந்த சிஹுவாஹுவா (Comando Chihuahua) நாய் எங்களுக்குப் பெரிதும் உதவுகிறது.

இது நேரடியாகச் செயல்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை. மாறாக, சமூக மக்களுடன் தொடர்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் பங்கேற்கிறது.

அதன் சிறிய உருவம் காரணமாக, மக்கள் அதனிடம் வந்து அதைத் தடவிக் கொடுக்கிறார்கள், அதனுடன் பேசுகிறார்கள். இதன் மூலம் அவர்கள் தேசிய காவல் படையினரிடமும் பேசத் தொடங்குகிறார்கள். இது சமூகத்துடன் சிறந்த நம்பிகத்தன்மையை உருவாக்க எங்களுக்கு உதவுகிறது.

ராணுவம் அல்லது ஆயுதப் படை என்றாலே மக்களிடம் இருந்து விலகி நிற்கும் அமைப்பு என்ற பழைய கருத்தை மாற்றுவது முக்கியம். சீருடைக்குப் பின்னால் இருப்பவர்களும் மனிதர்கள்தான் என்பதை மக்கள் பார்க்கவும் புரிந்துகொள்ளவும் வேண்டும். எங்களிடமும் உணர்வுபூர்வமான ஒரு பகுதி இருக்கிறது; மக்களின் பேச்சைக் கேட்டு, அவர்களைப் புரிந்துகொள்ளும் திறனும் எங்களிடம் உள்ளது.

எப்போதும் சமூகத்தினரிடம் பரிவுடன் நடந்துகொள்ள வேண்டும்." என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு