குஜராத்தில் எரிவாயு நிரப்பும் போது திடீரென வெடித்த கார்
குஜராத்தின் வடோதராவில் காரில் சி.என்.ஜி நிரப்பிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட வெடிப்பின் காட்சி இது.
இந்தச் சம்பவம், வடோதரா மாவட்டத்தின் கர்ஜன் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை 48-ல் அமைந்துள்ள ஒரு சி.என்.ஜி நிரப்பும் நிலையத்தில் நடந்தது.
இந்த வெடிப்பு மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்ததால், காரின் பின்பகுதியும் நடுப்பகுதியும் கடுமையாக சேதமடைந்தன.
மேலும், காரின் சி.என்.ஜி டேங்க் இரண்டு துண்டுகளாக உடைந்தது.
ஆரம்பகட்ட தகவல்களின்படி, காரில் ஏற்பட்ட எரிவாயு கசிவே இந்த திடீர் வெடிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
வெடிப்பின் தாக்கத்தால், காரின் பின்னால் நிறுத்தப்பட்டிருந்த மேலும் இரண்டு வாகனங்களும் சேதமடைந்தன.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவல் கிடைத்தவுடன், தீயணைப்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



