கூமாபட்டி பேக்கரியில் ஏற்பட்ட தகராறில் பெட்ரோல் குண்டு வீசிய நபர்

காணொளிக் குறிப்பு,
கூமாபட்டி பேக்கரியில் ஏற்பட்ட தகராறில் பெட்ரோல் குண்டு வீசிய நபர்
பிரசுரிக்கப்பட்டது

விருதுநகர் மாவட்டம் கூமாபட்டியில் பீர்ஒலி என்பவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார். அங்கு ஏற்பட்ட தகராறில் ஒரு நபர் பெட்ரோல் குண்டை வீசியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி பேருந்து நிலையத்தில் பீர்ஒலி என்பவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார். வியாழக் கிழமையன்று இசக்கிபாண்டி என்பவர் ஜூஸ் வாங்க கடைக்கு வந்துள்ளார். ஆனால் ஜூஸ் கிடைக்கத் தாமதமானதாகக் கூறி கடை ஊழியர்களுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவிட்டு அங்கிருந்து சென்றதாகக் கூறப்படுகிறது.

பிறகு மீண்டும் இரவில் பேக்கரிக்கு வந்த இசக்கிபாண்டி, தகராறில் ஈடுபட்டதோடு, தான் வைத்திருந்த பெட்ரோல் குண்டையும் கடைக்குள் வீசினார். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த கூமாபட்டி போலீசார் தலைமறைவாக உள்ள இசக்கிபாண்டியை தேடி வருகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு