காணொளி: திண்டுக்கல் சாலையில் கசிந்த 25,000 லிட்டர் ஆசிட்
காணொளி: திண்டுக்கல் சாலையில் கசிந்த 25,000 லிட்டர் ஆசிட்
பிரசுரிக்கப்பட்டது
திண்டுக்கலில் டேங்கர் லாரி விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த 25,000 லிட்டர் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் சாலையில் கசிந்தது.
திண்டுக்கல் - கரூர் நான்கு வழிச்சாலையில் உள்ள மேம்பாலத்தில் இன்று (15 நவம்பர் 2026) அதிகாலை இந்த விபத்து நடந்துள்ளது.
இதனால் அப்பகுதிகளில் புகைமூட்டம் சூழ்ந்தது. பின் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாடிக்கொம்பு காவல்துறையினர் போக்குவரத்தை உடனடியாக மாற்றி அமைத்தனர்.
தொடர்ந்து அங்கு வந்த திண்டுக்கல் தீயணைப்புத் துறையினர், சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆசிட் மீது அதிகளவு தண்ணீரைத் தொடர்ந்து பீய்ச்சியடித்து அதன் வீரியத்தைக் குறைத்து புகையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



