தேனியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மரணத்தில் என்ன நடந்தது?

காணொளிக் குறிப்பு,
தேனியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மரணத்தில் என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது

(எச்சரிக்கை: இந்த காணொளி சங்கடம் தரலாம்)

தேனியில் தீபாவளியன்று பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் பட்டாசு வெடித்த இளைஞர்களை தட்டிக்கேட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் அந்த இளைஞர்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்ட காவல்துறையின் தகவல்படி, ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு பணி முடிந்து வீடு திரும்பியபோது சாலையில் இளைஞர்கள் சிலர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடித்ததை கண்ட செந்தில் குமார், அவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அவர்களின் செயல்பாடுகளை தனது செல்போனில் வீடியோ பதிவு செய்யவும் முயன்றுள்ளார். அப்போது, இளைஞர் ஒருவரைப் பிடிக்க முயன்றபோது, மற்றொரு நபர் செந்தில்குமாரை தாக்கியதில், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் ரோந்து படையினரும் காவல் ஆய்வாளரும் அவரை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் அவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை, 5 தனிப் படைகளை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் பணியின்போது உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமாரின் குடும்பத்திற்கு ரூ.40 லட்சம் நிவாரம் வழங்க முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு