டெல்லியில் விவசாயிகள் போராட்டம் : ஒரு புகைப்படப் பதிவு

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில்.
படக்குறிப்பு, டெல்லி விவசாயிகள் போராட்டத்தில்.
பிரசுரிக்கப்பட்டது

டெல்லியில் இன்று நடந்த விவசாயிகள் பேரணியில் தமிழகம் உள்பட இந்தியா முழுவதிலும் இருந்து வந்த விவசாயிகள் பங்கேற்றனர். அந்த போராட்டத்தின் காட்சிகள் புகைப்படங்களாக...

தாலியைப் பார்க்கும் விவசாயப் போராளி.
படக்குறிப்பு, கழுத்தில் மஞ்சள் கயிறு. கனவில் தங்கத் தாலி: டெல்லி விவசாயிகள் பேரணியில் பங்கேற்றார் கால் நூற்றாண்டாக தங்கத் தாலியை அடமானம் வைத்துள்ளதாக கூறும் தமிழக விவசாயி மல்லிகா.

விவசாயிகளின் பிரச்சனைகளை விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி வேளாண் கடன் சுமையில் இருந்து விவசாயிகளை விடுவிப்பதற்கான சட்டம் (THE FARMERS' FREEDOM FROM INDEBTEDNESS BILL, 2018) மற்றும் உற்பத்திச் செலவைவிட அதிகமான, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டம் (THE FARMERS' RIGHT TO GUARANTEED REMUNERATIVE MINIMUM SUPPORT PRICES FOR AGRICULTURAL COMMODITIES BILL, 2018) ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும் என்பது இந்தப் பேரணியின் முக்கியக் கோரிக்கைகள்.

டெல்லி விவசாயிகள் பேரணியில் முழக்கம் எழுப்பும் முஸ்லிம் பெண் ஒருவர்.
படக்குறிப்பு, அடையாளங்கள் கடந்த முழக்கம்.
விவசாயிகள் பேரணி
பறை முழக்கும் விவசாயி.
படக்குறிப்பு, போராட்டம் ஒரு கலை.... கலை ஒரு போராட்டம்.
டெல்லி விவசாயிகள் பேரணி
படக்குறிப்பு, வறுமை என்ன, முதுமை என்ன? வாழ்க்கையே போராட்டம்தானே...
விவசாயிகள் பேரணி
படக்குறிப்பு, தெருவில் இசை முழக்கம்.
விவசாயிகள் பேரணி
படக்குறிப்பு, பஞ்சாப் விவசாயிகள்.
விவசாயிகள் பேரணி
படக்குறிப்பு, சும்மா உட்கார்ந்தா முடியுமா என்று போராட உட்கார்ந்திருக்கிறாரோ?
விவசாயிகள் பேரணி
படக்குறிப்பு, சுமைகளோடு...
டெல்லி விவசாயிகள் பேரணி
படக்குறிப்பு, ராம் லீலா மைதானத்தில் பேரணி தொடங்கும் முன் ஒரு விவசாயி.
விவசாயிகள் பேரணி
டெல்லி விவசாயிகள் பேரணியில் குடிநீருக்காக ஒரு போராட்டம்.
படக்குறிப்பு, போராட்டத்துக்குள் ஒரு போராட்டம் - குடிநீருக்காக.
டெல்லி விவசாயிகள் பேரணிக்கு நடுவில் வாங்க ஆளில்லா திண்பண்டக் கடை.
படக்குறிப்பு, ஆயிரம் வயிறுகளுக்கு மத்தியில் பசியோடு ஒரு கடை: பண்டம் இருந்தென்ன, பணம் இருந்தால்தானே வாங்க முடியும்?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: