காணொளி: இன்ஸ்டாகிராம் போலவே வாட்ஸ் அப்பிலும் வரவிருக்கும் யூசர்நேம்
வாட்ஸ்அப் பயனர்கள் தங்களது செல்போன் எண்ணை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தாமலேயே அவர்களுடன் உரையாடும் வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.
அடுத்த சில மாதங்களில் நடைமுறைக்கு வரவிருக்கும் இந்த வசதியைப் பெற உங்களுக்கு தேவையான பயனர் பெயரை பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம்.
பயனர்களின் தனியுரியை பாதுகாக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் இந்த சேவையில், தொலைபேசி எண்ணை மற்றவர்களிடம் பகிராமலேயே அவர்களுடன் தொடர்புகொள்ளலாம்.
பயனர்கள் தங்களது பயனர் பெயர்களை எப்போது வேண்டுமானாலும் நீக்கவோ அல்லது மாற்றவோ முடியும்.
இது முழுமையாகச் செயல்படுத்தப்பட்டதும், வாட்ஸ்அப் பயனர்கள் தங்களது பயனர் பெயரை மட்டுமே பரிமாறிக்கொண்டு ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்ள முடியும். தேவையற்ற செய்திகளைத் தடுப்பதற்கும் அல்லது அதுகுறித்துப் புகாரளிப்பதற்கும் இன்னும் விருப்பத்தேர்வுகள் இருக்கும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



