காணொளி: கோவையில் 10 வயது சிறுமி கொலையில் இருவர் கைது; தவெக அரசு மீது விமர்சனம்
கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் இருவரை கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் காவல்துறை கூறுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தவெக அரசு மீது விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். என்ன நடந்தது?
மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி கூற்றுப்படி, கோவை மாவட்டத்தில் வசித்து வரும் ஒரு தம்பதியின் 10 வயது மகளை காணவில்லை என அவசர உதவி எண் 100 மூலம் போலீஸாருக்கு கடந்த 21ஆம் தேதி இரவு தகவல் வந்துள்ளது. பின்னர் உடனடியாக புகார் பெறப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 5 தனிப்படைகளை அமைத்து சிறுமியை போலீஸார் தேடி வந்திருக்கின்றனர்.
பின்னர் இந்த வழக்கில் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி விளக்கமளித்தார்.
இந்த வழக்கில் போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரம்யா பாரதி கூறினார்.
முன்னதாக, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று இரவு சூலூர் காவல்நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போரட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் களமிறங்கியதால் திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



