கிராஃபிக்ஸ் அல்ல, நிஜம்! வானில் இந்த அற்புத காட்சி எங்கே, எவ்வாறு தோன்றியது?

துருவ ஒளிகள்
படக்குறிப்பு, ைகிழக்கு மிட்லாண்ட்ஸின் நார்மன்டன் தேவாலயத்தை அடுத்துள்ள ருத்லாண்ட் வாட்டர் பகுதியில் தோன்றிய துருவ ஒளி.
    • எழுதியவர், நடாஷா பிரெஸ்கியால்
    • பதவி, பிபிசி செய்திகள்
  • பிரசுரிக்கப்பட்டது

பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்திவாய்ந்த புவி காந்தப் புயல் ஒன்று தாக்கியதன் விளைவாக, கடந்த வெள்ளிக்கிழமை இரவு உலகின் பெரும்பாலான பகுதிகளில், அபூர்வ வானியல் நிகழ்வான துருவ ஒளி (Northern lights) தோன்றியது.

இத்தகைய புவி காந்தப் புயல் நிகழ்வுகள் வானில் துருவ ஒளி தோன்றும் வாய்ப்பை அதிகரிக்கின்றன. கடைசியாக 2003இல் ஒரு வலுவான புவி காந்தப் புயல் ஏற்பட்டது.

உலகின் பல பகுதிகளில் வானில் தோன்றிய துருவ ஒளியின் சில சிறந்த புகைப்படங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

துருவ ஒளிகள்
படக்குறிப்பு, இங்கிலாந்தின் லிவர்பூலில், கிராஸ்பி கடற்கரையில் உள்ள சிலைக்கு மேலே தோன்றிய துருவ ஒளிகள்.
துருவ ஒளிகள்
படக்குறிப்பு, நெதர்லாந்தின் ஆர்லாண்டர்வீனில் உள்ள மோலன்விர்காங் ஆலைக்கு மேலே இரவு வானில் தோன்றிய துருவ ஒளி.
துருவ ஒளிகள்
படக்குறிப்பு, ரஷ்யாவின் தென்மேற்கு சைபீரிய நகரமான தாராவில் துருவ ஒளிகளால் பிரகாசிக்கும் இளஞ்சிவப்பு வானம்.
துருவ ஒளிகள்
படக்குறிப்பு, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான் பிரான்சிஸ்கோவின் வடக்குப் பகுதியில் உள்ள மிடில்டனில் வானில் தோன்றிய துருவ ஒளி
துருவ ஒளிகள்
படக்குறிப்பு, ஸ்காட்லாந்தின் வடக்கு குயின்ஸ்ஃபெரியில் உள்ள ஃபோர்த் பாலத்திற்கு மேலே ஊதா மற்றும் பச்சை நிறங்களில் தோன்றிய துருவ ஒளிகள்.
துருவ ஒளிகள்.
படக்குறிப்பு, வடகிழக்கு உக்ரைனில் உள்ள கார்கிவ் மீது தோன்றிய துருவ ஒளி
துருவ ஒளிகள்
படக்குறிப்பு, சுவிட்சர்லாந்தின் டெய்லென்ஸ் கிராமத்தில் பாப்லர் மரங்களின் வரிசைக்கு மேலே அழகான துருவ ஒளி
துருவ ஒளிகள்
படக்குறிப்பு, பிபிசி வானிலை கண்காணிப்பாளர் பேராசிரியர் மில்லர் வேல்ஸில் உள்ள மோல்ட், பிளின்ட்ஷயர் மீது வானத்தில் தோன்றிய துருவ ஒளியைப் படம் பிடித்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)