காணொளி: சௌதியில் மரண தண்டனை - வங்கதேசத்தை சேர்ந்தவர்களின் குடும்பத்தினர் கூறுவது என்ன?
காணொளி: சௌதியில் மரண தண்டனை - வங்கதேசத்தை சேர்ந்தவர்களின் குடும்பத்தினர் கூறுவது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
சௌதி அரேபியாவில், ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட வங்கதேசத்தைச் சேர்ந்த பெண் மற்றும் ஆண் குறித்து தற்போது புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பெண் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்.அந்தப் பெண் மற்றும் ஆணின் குடும்பத்தினரிடம் பிபிசி வங்க சேவை பேசியுள்ளது.
தங்கள் மகள் தவறு செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்தோ, அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்தோ தங்களுக்குத் தெரியாது என்று பெண்ணின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
பின்னர், அந்தப் பெண்ணின் நண்பர் ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



