காணொளி: சாலையில் சிக்கிய லாரியை மீட்க முயன்றபோது பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

காணொளிக் குறிப்பு, நீலகிரியில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி
காணொளி: சாலையில் சிக்கிய லாரியை மீட்க முயன்றபோது பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
பிரசுரிக்கப்பட்டது

நீலகிரி மாவட்டம் குன்னூரில் லாரி டிப்பர் லாரி ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான காட்சி இது. இதில் லாரி ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார்.

ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை குன்னூரில் இருந்து சிம்ஸ் பார்க் செல்லும் நெடுஞ்சாலையில் கற்களை ஏற்றிச் சென்ற டிப்பர் லாரியின் டயர்கள், சாலையில் இருந்த குழியில் சிக்கியுள்ளது. இதையடுத்து மண் தோண்டும் கனரக இயந்திரம் மூலம் லாரியை மீட்கும் முயற்சி நடைபெற்றது. அப்போது லாரி எதிர்பாராத விதமாக சாலையின் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

அப்பகுதியில் இருந்த நபர் தனது செல்போனில் பதிவு செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு