காணொளி: ஆண்கள் மட்டுமே வாசித்துவந்த இசைக்கருவியை இசைக்கும் பெண்கள்

காணொளிக் குறிப்பு,
காணொளி: ஆண்கள் மட்டுமே வாசித்துவந்த இசைக்கருவியை இசைக்கும் பெண்கள்
பிரசுரிக்கப்பட்டது

பாரம்பரியமாக, துர்கா பூஜைப் பந்தல்களிலும், சிலை கரைப்பு ஊர்வலங்களிலும் ஆண்களே பெரும்பாலும் தாக் எனப்படும் பாரம்பரிய மேளத்தை இசைத்து வந்தனர். ஆனால், காலம் மாறியிருக்கிறது; அந்தக் காட்சியும் மாறியிருக்கிறது. தற்போது ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் தாக் குச்சிகளைக் கையில் ஏந்தி இசைக்கத் தொடங்கியுள்ளனர். அவர்கள் பண்டிகைக் கொண்டாட்டங்களை மேலும் உற்சாகமிக்கதாக மாற்றியிருப்பதோடு, ஒரு காலத்தில் ஆண்களுக்கு மட்டுமே உரித்தானதாகக் கருதப்பட்ட கலையில் தங்களுக்கெனத் தனி அடையாளத்தையும் உருவாக்கியுள்ளனர்.

ரூம்பா மொண்டலும் அவரது தாயும் பத்மஸ்ரீ விருது பெற்ற தாக் இசைக் கலைஞர் கோகுல் சந்திர தாஸிடம் பயிற்சி பெற்றனர். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ரூம்பா பங்கேற்றுள்ளார். அவரது இசைத் திறமைக்குப் பண்டிட் ரவிசங்கர், ஜாகிர் உசேன் உள்ளிட்ட கலைஞர்களிடமிருந்து பாராட்டுகளும் கிடைத்துள்ளன.

2010-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது, வெளிநாட்டுப் பெண் ஒருவர் பல்வேறு இசைக்கருவிகளைத் திறமையாக இசைப்பதை கோகுல் சந்திர தாஸ் கண்டார். அவரால் ஈர்க்கப்பட்ட அவர், மேற்கு வங்கத்தில் பெண்களின் கைகளிலும் தாக் மேளத்தை ஒப்படைக்க முடிவு செய்தார். இதையடுத்து, அந்த மாநிலத்தின் முழுக்க முழுக்க பெண்களைக் கொண்ட முதல் தாக் இசைக் குழுவை உருவாக்கினார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு