காணொளி: 'சிஎஸ்கே யோசிக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கு' - யோ மகேஷ்
காணொளி: 'சிஎஸ்கே யோசிக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கு' - யோ மகேஷ்
பிரசுரிக்கப்பட்டது
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 2026 ஐபிஎல் கோப்பைக்கான போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 89 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து பிளே ஆஃப் வாய்ப்பை இழந்திருக்கிறது சிஎஸ்கே. தொடர்ந்து மூன்றாவது சீசனாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்திருக்கிறது அந்த அணி.
விளையாடிய 14 போட்டிகளில் ஆறில் மட்டுமே வெற்றி பெற்று 12 புள்ளிகள் மட்டுமே பெற்றது சிஎஸ்கே. குஜராத்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நிலையில், 89 ரன்களில் படுதோல்வி அடைந்தது அந்த அணி.
“சென்னை சூப்பர் கிங்ஸ் யோசிக்க வேண்டிய விஷயங்கள் அதிகமாக உள்ளன” என அணியின் தோல்வி குறித்து பேசினார் சிஎஸ்கே முன்னாள் வீரர் யோ மகேஷ்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



