காணொளி: மூட்டை மூட்டையாய் ரூ.10 நாணயங்கள் - ஸ்கூட்டர் வாங்கிய நபர்
ஸ்கூட்டர் வாங்க ஷோரூமுக்குச் செல்கிறீர்கள். அதற்குத் தேவையான ஒரு லட்சத்து 23 ஆயிரம் ரூபாயையும் 10 ரூபாய் நாணயங்களாக மூட்டைகளில் கொண்டுபோய்க் கொடுத்தால் எப்படி இருக்கும்?
தெலங்கானா மாநிலம், மஞ்சிரியால் மாவட்டத்தில் உள்ள லக்ஷெட்டிப்பேட்டையைச் சேர்ந்த பொட்டு ரவி ஜோசப் இதைத்தான் செய்திருக்கிறார்.
ரூபாய் நோட்டுகளை மாற்றும்போது கிடைக்கும் சில்லறையை, மூன்று ஆண்டுகளாக நாணயங்களாகச் சேமித்து வந்ததாக அவர் கூறினார்.
"மூன்று ஆண்டுகளாக, நான் காய்கறிக் கடைக்கோ அல்லது மளிகைக் கடைக்கோ சென்றாலும், மீதம் கிடைக்கும் சில்லறையை சேமித்து வந்தேன்.
நான் சுமார் 1 லட்சத்து 23 ஆயிரம் ரூபாயை சேமித்தேன்.
இதற்கு மூன்று ஆண்டுகள் ஆனது.
ஏதாவது ஒன்றை வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன், இந்த வழியில் கொஞ்சம் கொஞ்சமாக சேமித்தேன்
முதலில் என் குடும்பத்தினர் சிரமப்பட்டனர், ஆனால் பின்னர் அவர்கள் ஒத்துழைத்தனர் - என் குடும்பம், மகன், மகள், மனைவி என அனைவரும் ஒத்துழைத்தனர்." என்றார்.
அவர் கொண்டுவந்த நாணயங்களை எண்ணி முடிக்க, ஷோரூம் ஊழியர்கள் பல மணி நேரம் உழைக்க வேண்டியிருந்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



