காணொளி: மும்பை ரயிலில் கத்திக்குத்து - ஒருவர் பலி

காணொளிக் குறிப்பு, மும்பை ரயிலில் கத்திக்குத்தில் ஒருவர் பலி
காணொளி: மும்பை ரயிலில் கத்திக்குத்து - ஒருவர் பலி
பிரசுரிக்கப்பட்டது

ஜூன் 23 அன்று இரவு சுமார் 10 மணியளவில் மும்பை லோக்கல் ரயிலில் மயங்க் லோஹர் என்ற இளைஞர் கத்தியால் குத்தப்பட்டார். இந்த தாக்குதலில் அவர் உயிரிழந்தார்.

கான்டிவலி மற்றும் போரிவலி ரயில் நிலையங்களுக்கு இடையே கனமழை பெய்து கொண்டிருந்தது.

அப்போது, ​ரயிலின் கதவை மூடுவது தொடர்பாக மயங்க் லோஹருக்கும் மற்றொருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால், கோபமடைந்த அந்த நபர் தனது பையிலிருந்து கத்தியை எடுத்து மயங்க் லோஹரைத் தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே மயங்க் உயிரிழந்தார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு