காணொளி: மனைவிக்காக படிக்கட்டுகளை லிஃப்ட் போல மாற்றிய கணவர்
காணொளி: மனைவிக்காக படிக்கட்டுகளை லிஃப்ட் போல மாற்றிய கணவர்
பிரசுரிக்கப்பட்டது
வீட்டிலுள்ள படிக்கட்டுகளைப் பொறுத்தவரை, மேல் தளத்தை அடைய ஒவ்வொரு படியாக ஏற வேண்டும். ஆனால் இந்த வீட்டில் அப்படியில்லை. ஒரு படியில் ஏறி நின்று பொத்தானை அழுத்தினால் அதுவே மேல் தளத்திற்குக் கொண்டு சென்று விட்டுவிடும்.
மேலோட்டமாகப் பார்க்கையில், இதுவொரு எஸ்கலேட்டர் போலவே காட்சியளிக்கிறது. ஆனால், இது இந்த வீட்டில் வசிப்போரின் தேவைகளுக்கு ஏற்ப சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு ‘படிக்கட்டு லிஃப்ட்’.
இதை வடிவமைத்த வீட்டின் உரிமையாளர் சிவநாராயண ரெட்டி, இதைத் தனது மனைவிக்காக செய்ததாகக் கூறுகிறார்.
விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



