காணொளி: பாகிஸ்தானில் ஓடும் ரயில் மீது தாக்குதல் குறைந்தது 20 பேர் பலி

காணொளிக் குறிப்பு, பாகிஸ்தானில் ஓடும் ரயில் மீது தாக்குதல் குறைந்தது 20 பேர் பலி
காணொளி: பாகிஸ்தானில் ஓடும் ரயில் மீது தாக்குதல் குறைந்தது 20 பேர் பலி
பிரசுரிக்கப்பட்டது

பாகிஸ்தானில் ராணுவ வீரர்கள் பயணித்த ரயிலை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 20 பேர் உயிரிழந்தனர். மேலும் 70 பேர் காயமடைந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை அன்று காலை, மேற்கு பலூசிஸ்தான் பகுதியின் குவெட்டாவில் உள்ள சாமன் பதாக் ரயில் நிலையம் வழியாக ரயில் சென்று கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது.

இதில் ரயிலின் மூன்று பெட்டிகள் மற்றும் என்ஜின் தடம் புரண்டதாகவும், மேலும் இரண்டு பெட்டிகள் கவிழ்ந்ததாகவும் ரயில்வே அதிகாரிகள் பிபிசி உருதுவிடம் தெரிவித்தனர். ஈத் பண்டிகைக்காக ராணுவ வீரர்கள் தங்களில் குடும்பத்துடன் ரயிலில் பயணித்தாக கூறப்படுகிறது.

பலூசிஸ்தான் விடுதலைப் படை என்ற அமைப்பு இதற்கு பொறுப்பேற்றுக் கொண்டு, இது தற்கொலைப்படை தாக்குதல் என தெரிவித்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் அதிகாரிகள் இதை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிஃப் இந்த தாக்குதலை கண்டித்துள்ளார். "இத்தகைய கோழைத்தனமான பயங்கரவாத செயல்களால் நாட்டு மக்களின் மன உறுதியை பலவீனப்படுத்த முடியாது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு