காணொளி: சில மணி நேரங்களில் உலகுக்கு நல்ல செய்தி: மார்கோ ரூபியோ
அடுத்த சில மணி நேரங்களில் உலகத்துக்கு நல்ல செய்தி வர வாய்ப்பு இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன் என, அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் பேசிய அவர், "அது எதுவாக இருந்தாலும் குறைந்தபட்சம், நீரிணை தொடர்பாகவும் அதிபர் விரும்பும் நிலையில் நம்மை கொண்டு செல்லக்கூடிய செயல்முறை தொடர்பாகவும் முன்னேற்றம் இருக்கலாம்.
அதாவது, இரானின் அணு ஆயுதத்தை பற்றி உலகம் இனி பயப்பட வேண்டியதில்லை என்ற நிலை. அதனால் அந்த விஷயத்தில் சில நல்ல செய்திகள் உள்ளன என்று நினைக்கிறேன். ஆனால் அது இறுதியான தகவல் அல்ல.
ஆனால் இன்று சிறிது நேரத்துக்குப் பின் மேலும் தகவல்கள் சொல்ல முடியும். ஆனால், சில முன்னேற்றங்கள் நடந்துள்ளன. அதை நான் சிறிய விஷயமாக காட்ட விரும்பவில்லை,
ஆனால் இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியுள்ளது என்பதையும் சொல்ல விரும்புகிறேன்." என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



